அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்கமாட்டோம் – எச்சரிக்கையை உதாசீனப்படுத்த வேண்டாம் – புடின்

Russian President Vladimir Putin makes an address, dedicated to a military conflict with Ukraine, in Moscow, Russia, in this still image taken from video released September 21, 2022. Russian Presidential Press Service/Kremlin via REUTERS
ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவித்தால் அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்கமாட்டோம் என அதிபர் விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார்.
தங்கள் சொந்த எதிர்காலத்தை தீர்மானிக்க வீரர்களுக்கு ஆதரவு வழங்கப்படும். ரஷியாவிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் எந்த எல்லைக்கும் செல்ல நாங்கள் தயார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணு ஆயுத தாக்குதல் குறித்து தனது எச்சரிக்கையை உதாசீனப்படுத்த வேண்டாம் எனத் தெரிவித்த புடின், ரஷ்யர்கள் அதிகம் வசிக்கும் டான்பாஸ் பிராந்தியத்தை உக்ரைன் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிப்பதே போரின் குறிக்கோள் என்றார்.