November 21, 2024

50 நாளில் 100 நாள் போராட்டம்!!

தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் உரிமையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் 100 நாள் செயல் முனைவுப் போராட்டத்தின் 50 ஆவது நாள் நிகழ்வுகள் இன்று காலை (19) மட்டக்களப்பு கல்லடி கடற்கரைப் பகுதியில் இடம்பெற்றது.

இப்போராட்டமானது வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் இன்று (19) முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் நெறிப்படுத்துனர் கண்டுமணி லவகுசராசா தலைமையில் வடக்கு கிழக்கில் உள்ள மாவட்டங்கள் அனைத்திலும் சுழற்சி முறையில் 100 நாட்கள் செயல் முனைவு போராட்டமானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இன்றைய நாள் நிகழ்வில் கோரிக்கை அடங்கிய பதாதைகளை கையில் ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

நடமாடுவது எங்கள் சுதந்திரம் ஒன்று கூடுவது எங்கள சுதந்திரம‘, ‚பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை‘, ‚வேண்டும் வேண்டும் வடக்கு கிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வு வேண்டும்‘  சிவில் அமைப்புக்களின் செயற்பாட்டை தடுக்காதே, ‚அரசியல் கைதிகளை விடுதலை செய் ‚ ‚எங்கள் நிலம் எமக்கு வேண்டும்,‘ என்பன போன்ற கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  போராட்டத்தின் இறுதியில் கோரிக்கை வாசகங்கள் எழுதப்பட்ட காற்றாடிகள் பேரணியாக கடற்கரையில் எடுத்துச் செல்லப்பட்டு பறக்கவிடப்பட்டன.  இதில் சிவில் அமைப்புக்கள் இளைஞர் யுவதிகள் மற்றும் பிரதேச மக்கள் கலந்து கொண்டனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert