இன அழிப்புக்கு எதிரான நீதியை வாய்விட்டு கேட்கின்றோம் – தமிழ் இன அழிப்புக்கு எதிரான ஈ கூட்டமைப்பு
அனைவருக்கும் வணக்கம்
முதன் முறையாக நாங்கள் தாயகத்திலிருந்து வருகை தந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 51 வது கூட்டத்தொடரில் தமிழ் இன அழிப்புக்கு எதிரான ஈ கூட்டமைப்பு என்ற வகையில் முருகதாசன் திடலிலே ஒரு ஒன்றுகூடலை நடாத்தியிருந்தோம்.https://www.youtube.com/embed/lJCz1M9bgFA
கடந்த காலங்களிலே ஐக்கிய நாடுகளிடமோ அல்லது சர்வதேச நாடுகளிடமோ நாங்கள் பேசுகின்ற பொழுது தாயகத்திலிருக்கும் எங்களுக்காக எங்களுடைய நீதிகோருகின்ற செயற்திட்டத்தை புலம்பெயர் வாழ் தமிழர்கள் இந்த முருகதாசன் திடலிலே முன்னின்று நடத்தியிருந்தனர். இதனை தாயகத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களின் கோரிக்கை அல்ல இது புலம்பெயர்ந்து வாழ்கின்ற விடுதலைப்புலிகள்தான் இன அழிப்புக்கான நீதி வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தும் மற்றும் தனிநாடு வேண்டும் என்பதற்காகவும் இவ்வாறு முன்னின்று நடாத்துகின்றனர் என ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச நாடுகளும் எண்ணியிருந்ததனை நான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வந்த பொழுது கூறியிருந்தார்கள்.
எனவேதான் நாங்கள் தாயகத்தில் 6ம் திருத்தச் சட்டத்தின்கீழ் உட்பட்டு இருந்தாலும் ஒரு இன அழிப்புக்கு ஆளாகியிருக்கின்றோம். கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்கும் உள்ளாகிக் கொண்டிருக்கின்றோம் என்ற வகையில் தாயகத்தில் இருந்து அரசியல் தலைவர்கள் எங்களுடன் கருத்து ஒருமித்தவர்கள் எல்லோரையும் அழைத்து வந்து இந்த இடத்தில் ஒரு செய்தியை ஐ நாவிடமும் சர்வதேசத்திடமும் தெரிவித்திருக்கின்றோம். நாங்களும் இன அழிப்புக்கு எதிரான நீதியை வாய்விட்டு கேட்கின்றோம் என்பதும் எங்களுக்கான எங்கள் இனப் பிரச்சனைக்கான அரசியல் தீர்வையும் வழிவகுக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்திருக்கின்றோம்.
அனைத்துலக மனித உரிமைகள் சங்கத்துடன் சேர்ந்து நாங்கள் இவ் ஒன்றுகூடலுக்காக ஏற்பாடுகள் செய்திருந்தோம். நாங்கள் பல நாடுகளிலிருந்தும் உதாரணமாக மலேசியா, தென்ஆபிரிக்கா, தமிழ்நாடு போன்ற நாடுகளிலிலிருந்தும் பல தலைவர்களை இந்த ஒன்றுகூடலுக்கு அழைக்க இருந்தோம். பொருளாதார நெருக்கடி காரணமாக எங்களால் அவர்களை அழைக்க முடியவில்லை. இருந்தபோதிலும் நாங்கள் முன்மாதிரியாக செய்திருந்தோம்.
உண்மையில் இங்கே பலரும் எங்களுக்காக பொருளாதார உதவிகளை செய்திருக்கின்றார்கள். குறிப்பாக பேர்னில் அமைந்துள்ள குறிப்பிட்ட ஆலயம், சில வர்த்தக நிலையங்கள், தனிப்பட்ட நபர்கள் ஊடாகவும் எங்களுக்கு நிதி உதவி வழங்கியுள்ளார்கள்.
இவர்களுக்கும் இந்த நிதித் திரட்டலினை ஏற்பாடு செய்த அனைத்துலக மனித உரிமை சங்கத்திற்கும் எமது நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இதுவரைக்கும் நீங்கள் எமக்கு உதவிய நிதி 6390 ஆகவும் ஆனால் இதுவரையிலும் எமக்கு ஏற்பட்ட செலவு 8700 ஆகவும் உள்ளது. எனவே எங்கள் நிதிப் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக உங்கள் உதவியையும் நாடி நிற்கின்றோம்.
மேலும் எங்களுக்கு நீங்கள் உங்களால் இயன்ற சிறு உதவி செய்வீர்கள் என்ற நம்பிக்கையில் இந்த காணோளியின் இறுதியிலே அனைத்துலக மனித உரிமை சங்கத்தின் கணக்கு இலக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுக்கும் உங்களுக்குமான ஒரு வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக
நாங்கள் இங்கே வருகை தந்த நாட்களிலிருந்து ஒன்றுகூடலில் ஏற்பட்ட மற்றும் நாங்கள் தாயகத்திற்கு திரும்ப செல்லும் செலவு வரையிலான எங்களுக்கு ஏற்பட்ட வரவு செலவு பற்றிய ஒரு முழுமையான கணக்கறிக்கையினை நாங்கள் தாயகம் சென்றதும் உங்களுக்கு சமர்ப்பிப்போம்.
எதிர்வரும் ஜீன் மாதமும் நடைபெற இருக்கின்ற ஈழத் தமிழருக்கு குரல் கொடுப்பதற்காக பெரியளவிளான ஏற்பாடு நடைபெற இருக்கின்றது. எனவே எம் புலம்பெயர் தாயக உறவுகளே உங்கள் ஆதரவு கரங்களை இறுகப் பற்றிக் கொண்டு எங்களது பயணம் தொடரும்.
நன்றி
திருமதி. அனந்தி சசிதரன்.
இணைத் தலைவர்
இன அழிப்புக்கு எதிரான தமிழ் கூட்டமைப்பு.
திரு. கஜன்
தலைவர்.
அனைத்துலக மனித உரிமைகள் சங்கம்.