November 24, 2024

உயிர்த்த ஞாயிறு:நட்ட ஈடு மூலம் வாய் மூட முயற்சி!

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சொத்து தங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக தொடரப்பட்டுள்ள 107 வழக்குகளை தள்ளுபடி செய்யுமாறு சட்டமா அதிபர் கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி மஹேஷ் டி சில்வாவிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி சமர்பித்த 2019/04 இலக்க அமைச்சரவை ஆவணத்திற்கு ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி அங்கீகாரம் கிடைத்திருப்பதாகவும், இந்த அமைச்சரவை ஆவணத்திற்கு அமைவாக இந்த இழப்பீட்டு தொகை வழங்கப்படும்.

அமைச்சரவை ஆவணத்திற்கு அமைய உயிரிழந்த மற்றும் வாழ் நாள் முழுவதும் ஊனமுற்ற நபர்களுக்காக ஒரு மில்லியன் ரூபாவும், காயமடைந்த நபர் ஒருவருக்கு 5 இலட்சம் ரூபாவும், சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்காக ஆகக்கூடுதலாக 5 இலட்சம் ரூபாவும் வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதை சட்டமா அதிபர் தெரிவித்ததுடன் இழப்பீடு வழங்குவதற்கான பணிகளை சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான அலுவலகத்திற்கு ஒப்படைப்பதற்கும் அமைச்சரவை சிபாரிசு செய்திருப்பதாகவும் சட்டமா அதிபர் மேலும் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் இருந்த போதிலும் அந்த தாக்குதலை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளபடாமையினால் இந்த தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த மற்றும் வாழ்நாள் முழுவதும் ஊனமுற்ற நிலைக்கு தள்ளப்பட்டவர்களுக்கு இழப்பீட்டை பெற்றுத்தருமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் 107 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பான வழக்கு மனுக்களில் பிரதி வாதிகளாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு முன்னாள் அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர, புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜெயவர்தன மற்றும் தேசிய புலனாய்வு பிரிவின் சிசிர மென்டிஸ் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற போவதாக புலனாய்வு தகவல் கிடைக்கப்பெற்றிருந்த வேலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அரச அதிகாரிகள் தமது பொறுப்புக்களைஉரிய முறையில் நிறைவேற்றாமை தாக்குதலை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளாமை மற்றும் கடமையை புறம்தள்ளியமை ஆகியவற்றினால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு இழப்பீ அறவிட்டு தருமாறு மனுதாரர்கள் நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

முறைப்பாட்டுக்காரர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு தன்மைக்கு அமைவாக 1 கோடி ரூபாவுக்கு மேற்பட்ட இழப்பீட்டை கோரி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது பிரதி வாதிகள் சார்பில் ஆஜரான சட்டமா அதிபர் மேலும் சில விடயங்களை முன்வைத்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக உயிரிழந்த மற்றும் வாழ்நாள் முழுக்க ஊனமுற்றவர்களுக்கு இழப்பீட்டை வழங்குவதற்கு அமைச்சரவை சிபாரிசு செய்துள்ளதாகவும் இந்த இழப்பீடு கிடைக்கும் வரையில் தற்காலிக கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கத்திற்கு ஆற்றல் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும் முறைப்பாட்டு காரர்கள் இந்த கொடுப்பனவை பெற்றுக்கொள்வதற்காக இதுவரையில் கோரிக்கை முன்வைக்கவில்லை என்றும் சட்டமா அதிபர் மேலும் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

வழக்குகளின் இரண்டாவது பிரதிவாதியாக பேர் குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் அவருக்காக பதிலை இந்த சந்தர்ப்பத்தில் மேற்கொள்வது இல்லை என்றும் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளமையால் அரசியல் யாப்பின் 35/1 இற்கு அமைவாக உள்ள உரிமைக்கு அமைவாக வழக்கிலிருந்து

பிரதிவாதிளை விடுவிப்பதற்கான உத்தரவை வழங்குமாறு கோரி மனு ஒன்றை தாக்கல் செய்து நீதிமன்றத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கு முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில் ஜனாதிபதிக்கான உரிமையின் கீழ் தன்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்குமாறு கோரப்பட்டிருந்த போதிலும் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டு மேல் நீதிமன்றத்தினால் மேற்கொள்ளப்பட்ட மேல்முறையீடு தற்பொழுது விசாரிக்கப்பட்டு வருகின்றது.

முறைப்பட்டு காரர்களின் சார்பில் சட்டத்தரணிகள் குழாமுடன் ஜனாதிபதி சட்டத்தரணி சமில் பெரேரா ஆஜரானார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சார்பில் தினேஷ் வித்தாரண உள்ளிட்ட சட்டத்தரணி குழாம் ஆஜரானது. ஏனைய பிரதிவாதிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்த்தப்பா உள்ளிட்ட சட்டத்தரணி குழு ஆஜரானது.

இந்த வழக்கு மேலதிக விசாரணைக்காக நவம்பர் 02 ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert