6 ஆயிரம் சதுரகிலோ மீற்றர் உக்ரைன் வசம்! ரஷ்ய வீரர்கள் பலர் கைது!
ரஷ்யா கைப்பற்றிய 6 ஆயிரம் சதுர கி.மீ. (2,320 சதுர மைல்கள்) பகுதிகள் மீட்கப்பட்டு உள்ளன என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
ஜெலன்ஸ்கி கூறும்போது, வடகிழக்கு பகுதியில் உக்ரைனின் படைகள் ரஷியாவை எதிர்த்து தீவிரமுடன் போரிட்டு வருகின்றன. அந்த பகுதியில் இழந்த இடங்களை பெருமளவில் மீட்டு வருகின்றன. செப்டம்பர் தொடக்கத்தில் இருந்து கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில் 6 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவை முன்பே எங்களுடைய படைகள் மீட்டெடுத்து உள்ளன.
தொடர்ந்து நாங்கள் முன்னேறி வருகிறோம். இந்த நடவடிக்கையில் ரஷ்ய படை வீரர்கள் பலர் சிறை பிடிக்கப்பட்டு உள்ளனர். ரஷ்யாவுக்கு சரியான பதிலடியும் கொடுக்கப்பட்டு உள்ளது.
வடகிழக்கு எல்லையில் எங்களது படைகள் அனைத்து வழிகளிலும் முன்னேறி வருகின்றன என கூறியுள்ளார். போர் கைதிகள் அதிகளவில் உள்ளனர் என்றும் அவர்களை தங்க வைக்க போதிய இடமில்லாத சூழல் உள்ளது என்றும் உக்ரைனிய அதிபரின் ஆலோசகர் ஒருவர் கூறியுள்ளார்.