ரஷ்யாவிடம் வீழ்ந்த 3000 சதுர கிலோ மீற்றர் நிலங்கை மீண்டும் கைப்பற்றியது உக்ரைன் படைகள்!!
உக்ரைனில் கிழக்கு பகுதியில் ரஷ்யா வசம் வீழ்ந்த முக்கிய நகரங்களை உக்ரைன் படைகள் மீட்டன. இதையடுத்து அங்கிருந்து ரஷ்ய படைகள் பின்வாங்கியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுபற்றி உக்ரைன் அதிகாரிகள் தெரிவிக்கையில்,
கிழக்கில் ரஷிய படைகளுக்கு முக்கிய வினியோக மையமாக குபியன்ஸ்க் செயல்பட்டு வந்தது. அங்கும் உக்ரைன் படைகள் நுழைந்துள்ளன என குறிப்பிட்டனர்.
ரஷ்ய ராணுவ அமைச்சகம், தனது படைகளை மீண்டும் ஒருங்கிணைக்க அனுமதிக்கும் வகையில் இஸியம் நகரில் இருந்து திரும்பப்பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது. மேலும் டொனெட்ஸ்க் போர்முனையில் முயற்சிகளை வலுப்படுத்தும் விதத்தில், மூன்றாவது முக்கிய நகரமான பலாக்லியாவிலிருந்து தங்கள் படைகள் திரும்பப் பெறப்பட்டதையும் ரஷ்ய ராணுவ அமைச்சகம் உறுதிப்படுத்தியது.
தற்போது ரஷ்யாவிடம் கைப்பற்றிய இடங்களிலிருந்து 3 ஆயிரம் சதுர கிலோ மீற்றர் பரப்புகளைக் கொண்ட நிலப்பகுதியயை உக்ரைன் விடுவித்துள்ளது. இஸியம் நகரில் இருந்து ரஷிய படைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக அந்த நாடே ஒப்புக்கொண்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.