இலங்கைக்கு 60 மில்லியன் அமெரிக்க டொலர்ளை வழங்குகிறோம் – சமந்தா
மனிதாபிமான உதவியாக 20 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், உரத்தைக் கொள்வனவு செய்வதற்காக ஒரு மில்லியன் விவசாயிகளுக்கு 40 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் ஏஜென்சியின் (USAID) நிர்வாகி சமந்தா பவர் அறிவித்துள்ளார்.
ஜானதிபதி மாளிகையில் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த
இலங்கைக்கான வருகையின் போது சமந்தா பவரினால் உறுதியளிக்கப்பட்ட தொகை மொத்தமாக 60 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
அத்துடன் இலங்கையில் அரசியல் சீர்திருத்தங்களும், பொருளாதார சீர்திருத்தங்களும் கைகோர்த்துச் செல்ல வேண்டும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை நிலையான கடன் மற்றும் நிலையான வர்த்தக சமநிலையை உறுதிப்படுத்த வேண்டும் அவர் மேலும் கூறினார்.