November 21, 2024

பளையில் இராணுவத்தினர் பண்ணை அமைக்க 1,840 ஏக்கர்?

வன்னியில் பெரும் நிலப்பரப்புகளை ஆக்கிரமித்து சிவில் பாதுகாப்பு குழுக்களது விவசாய பண்ணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இந்நிலையில் பளைப் பகுதியில் உள்ள  காணியில் இராணுவத்தினர் பண்ணை அமைக்க 1,840 ஏக்கர் நிலம் வழங்க அமைச்சரவை ஒப்புதலிறகு பத்திரம் நகர்கின்றது.

காணிச் சீர் திருத்த ஆணைக்குழுவிற்கு பளைப் பகுதியில் தற்போது 4 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது. 

இதில் 1840 ஏக்கர் நிலம்  விவசாய அமைச்சின் கீழ் இயங்கிய மக்கள் பெருந்தோட்டச் சபைக்கு 1988 இல் வழங்கியதாக அந்தச் சபை உரிமை கோரி வருகின்றது.

பெருந்தோட்டச் சபைக்கு 1988 இல் 1840 ஏக்கர் நிலம்  வழங்கியதற்கான ஆவணமோ சான்றுகளோ   அந்தச் சபையிடமோ அல்லது ஆணைக்குழுவிடமோ இல்லாத சூழலிலும் சபை  உரிமை கோரி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் குறித்த சபையின் பெயரில் நிலத்தை வழங்கி இராணுவத்தினர் மூலம் பெரும் பண்ணை அமைப்பதற்காக 1840 ஏக்கரையும் சபையின் பெயரில் வழங்க எதிர் வரும் திங்கள் கிழமை 12 ஆம் திகதி இடம்பெறவுள்ள அமைச்சரவையில் பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதற்கான சகல ஏறபாடுகளும் விவசாய அமைச்சு மற்றும் காணி அமைச்சு ஒன்றிணைந்து முன்னெடுப்பது தற்போது தெரியவந்துள்ளது. 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert