கனடாவில் கத்திக்குத்து: 10 பேர் பலி! கொலையாளிகளை தேடும் காவல்துறை!
கனடாவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த வெறித்தனமான கத்திக்குத்து சம்பவத்தில் 10 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர் எனக் காவல்துறையினர் அறிவித்தனர்.
கத்திக்குத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்களான டேமியன் சாண்டர்சன் (வயதுத 31) மற்றும் மைல்ஸ் சாண்டர்சன் (வயது 30) இருவரைக் காவல்துறையினர் தேடிக்கொண்டிருக்கின்றனர்.
இவருவரும் ஆபத்தானவர்கள் என்பதால் குடியிருப்பாளர்கள் மிகவும் விழிப்புடன் இருக்குமாறும் வீட்டை விட்டு வெளியே செல்லவேண்டாம் என்றும் யாரையும் வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம் என்றும் வீதியில் செல்லும் போது யாரையும் வாகனத்தில் ஏற்ற வேண்டாம் என்றும் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.
தொலைதூர பழங்குடி சமூகமான ஜேம்ஸ் ஸ்மித் க்ரீ நேஷன் மற்றும் அருகிலுள்ள வெல்டனில் 13 இடங்களில் இச்சம்பவம் நடந்துள்ளது.
ஜேம்ஸ் ஸ்மித் க்ரீ நேஷனில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டது. வெல்டன் கிராமத்தின் வடகிழக்கில் சுமார் 2,000 குடியிருப்பாளர்கள் வசிக்கும் சமூகத்தில் வெறும் 200 பேர் மட்டுமே வசிக்கின்றனர்.
ஏராளமான சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கொலையாளிகள் தேடப்பட்டு வருகின்றனர்.சந்தேக நபர்கள் ஞாயிற்றுக்கிழமை மதிய உணவு நேரத்தில் ரெஜினாவில் உள்ள பொதுமக்களால் கடைசியாகப் பார்க்கப்பட்டனர், மேலும் அவர்கள் கருப்பு நிற நிசான் ரோக் காரில் பயணித்திருக்கலாம் என்று அதிகாரி பிளாக்மோர் கூறினார்.
அவர்கள் ஆயுதம் ஏந்தியவர்களாகவும் ஆபத்தானவர்களாகவும் கருதப்படுகிறார்கள். சந்தேகப்படும் நபர்களையோ அல்லது அவர்களின் வாகனத்தையோ நீங்கள் கண்டால், அவர்களை அணுக வேண்டாம், உடனடியாக அந்தப் பகுதியை விட்டு வெளியேறி 911க்கு அழைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.