ரணிலுக்கு வாழ்த்து: அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்திய பொறிஸ்
இலங்கை மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தேவையான ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரும் அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முயற்சிகளை பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் பாராட்டினார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்கு ஜனநாயகக் கோட்பாடுகளை நிலைநிறுத்துவதும் ஜனநாயக இணக்கப்பாட்டைக் கோருவதும் இன்றியமையாததாக இருக்கும் என பிரித்தானியப் பிரதமர் ஜனாதிபதி விக்ரமசிங்கவுக்கு அரச தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானிய அரசாங்கத்தின் இலங்கைக்கான உண்மையான அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்திய பிரதமர் பொறிஸ் ஜோன்சன், இலங்கை மக்களுடன் குறிப்பாக தற்போதைய பொருளாதார மற்றும் சமூக சவால்களின் போது இங்கிலாந்து தொடர்ந்து பணியாற்றும் என்று குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் நீங்கள் விரைவான மற்றும் நேர்மறையான முன்னேற்றத்தை அடைய முடியும் என்று நான் நம்புகிறேன். இந்த விடயத்தில் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கு எமது சர்வதேச பங்காளிகளுடன் ஈடுபடுவதற்கு இங்கிலாந்து தயாராக உள்ளது. இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றில் நீண்டகால மற்றும் கணிசமான முன்னேற்றத்தை அடைய இரு அரசாங்கங்களும் இணைந்து பணியாற்ற முடியும் என்றும் பிரித்தானிய பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
செப்டம்பரில் நடைபெறவுள்ள 51வது ஐ.நா மனித உரிமைகள் பேரவை, அணுகுமுறை மாற்றத்துடன் உங்களது மனித உரிமைச் சான்றுகளை உங்கள் அரசாங்கம் நிரூபிக்கும் தருணமாக அமையும் என்றார்
நாங்களும் சர்வதேச சமூகத்தில் உள்ள மற்றவர்களும் இந்த பிரச்சினைகளில் உண்மையான மற்றும் உறுதியான முன்னேற்றத்தை அடைய இலங்கையுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட வளரும் நாடுகளின் வர்த்தகத் திட்டத்தையும் அவர் எடுத்துரைத்தார். இது, ஐக்கிய இராச்சியத்திற்கு ஏற்றுமதி செய்யப்படும் மொத்தப் பொருட்களில் பெரும்பாலானவற்றை வரியில்லா அணுகல் மூலம் இலங்கைக்கு பயனளிக்கும் வாய்ப்பை வழங்கும் என்றார்.
எங்கள் இருதரப்பு உறவை நாங்கள் தொடர்ந்து வலுப்படுத்துவதால், வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேம்படுத்த அதிக வாய்ப்புகளை நாம் காணலாம் என்று நம்புகிறேன். பசுமை நிதி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுடன் இங்கிலாந்து ஆதரவிற்கு வலுவான வாய்ப்புகள் உள்ளன என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று பிரிட்டிஷ் பிரதமர் கூறினார்,
காலநிலை மாற்றம் குறித்த பகிரப்பட்ட அபிலாஷைகள் குறித்து இரு தலைவர்களும் மே மாதம் நடத்திய உரையாடலை நினைவு கூர்ந்தார்.
பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன், இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, இங்கிலாந்தும் இலங்கையும் இன்னும் ஆழமான மற்றும் வலுவான பங்காளித்துவத்தை தொடர்ந்து கட்டியெழுப்ப வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிடார்.