யேர்மனியில் பணிப்புறக்கணிப்புப் போராட்டம்: 800 விமான சேவைகள் இரத்து!
விமானிகள் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக யேர்மனியின் லுஃப்தான்சா ஏர்லைன்ஸ் நிறுவனம் இன்று 800 விமான சேவைகளை இரத்து செய்துள்ளது.
ஊதிய உயர்வு கேட்டு விமானிகள் சங்கம் விடுத்த கோரிக்கையை விமான நிறுவனம் நிராகரித்ததால் இன்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக விமானிகள் சங்கம் அறிவித்தது. இதனால் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பயணிகள் பாதிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.