November 21, 2024

பசில் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கியது உச்ச நீதிமன்றம்

இலங்கையின் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு நான்கு மாத காலத்திற்கு அமெரிக்கா செல்ல உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன மற்றும் நவீன் மாரப்பன, தமது பசில் ராஜபக்ச மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதிக்குமாறு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளார்

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் அடங்கிய அமர்வு, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு அடுத்த வருடம் ஜனவரி மாதம் 15 ஆம் திகதி வரை வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

ஏற்கனவே முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.

இலங்கையின் நீச்சல் வீரரும் பயிற்சியாளருமான ஜூலியன் பொலிங், இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சந்திர ஜயரத்ன, ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் மற்றும் ஜெஹான் கனக ரெட்னா ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பில் உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த மனுவில், நிதி முறைகேடுகள் மற்றும் இலங்கை பொருளாதாரத்தின் தவறான நிர்வாகத்திற்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு மனுதாரர்கள் கோரியிருந்தை நினைவூட்டத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert