எச்ஜினில் கோளாறு: நிலவுக்கு ரொக்கெட் ஏவுதலை நிறுத்தியது நாசா
இன்று கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து இந்த நிலவுக்கு மீண்டும் விண்கலம் புறப்படவிருந்தது. இந்நிலையில், நாசாவின் ஆர்டிமிஸ் 1 ரொக்கெட்டின் விண்வெளி ஏவுதல் அமைப்பில் உள்ள ஒரு இயந்திரம் (எச்ஜின்) செயலிழந்ததால் ஏவுதலின் கவுண்டவுன் 40 வது நிமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாசாவின் அடுத்த தலைமுறை சக்திவாய்ந்த ராக்கெட்டான ஆர்டிமிஸ் 1, ஓரியன் விண்கலத்தை சுமந்து 42 நாட்களில் 65 ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து நிலவுக்கு சென்று திரும்பும் வகையில் திட்டமிடப்பட்டது.
திரவ எரிபொருளை பயன்படுத்தி செயல்படும் நான்கு RS-25 எஞ்சின்களில் ஒன்று செயலிழந்தது.
பிரச்சனையை வல்லுநர் குழுவினர் சரி செய்யும் முயற்சி தோல்வியடைந்த நிலையில், ராக்கெட் ஏவுதல் கவுண்டவுன் டி மைனஸ் 40 நிமிடங்களில் நிறுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து, ஆர்ட்டெமிஸ்-1 திட்ட ஹைட்ரஜன் குழு, ரொக்கெட் ஏவுதல் இயக்குனருடன் அடுத்தகட்ட நடவடிக்கைளை பற்றி விவாதிக்க உள்ளனர்.
ஆர்ட்டெமிஸ்-1 விண்ணில் பாய்வதை காண, அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரையில் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
நாசா மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கான ஆர்டெமிஸ் திட்டத்தை தொடங்கியுள்ளது. 2025க்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள நாசா தற்போது ஆர்டெமிஸ் 1 ரொக்கெட்டை நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக அனுப்ப இன்று திட்டமிட்டிருந்தது.