ரணில் சொன்னதை செய்யாதவர்!
பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அடக்குமுறை சட்டங்களை உடனடியாக இரத்து செய்ய வேணடும், மக்களின் உரிமைக்காகவும் தேசிய வளங்களை பாதுகாப்பதற்காகவும் போராடியவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நடவடிக்கை இன்று கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்றது.
ஒன்றிணைந்த தொழிற்சங்க மைய்யம் ஒன்றிணைந்து இந்த கையெழுத்து பெறும் நடவடிக்கையை ஒழுங்கு செய்து இருந்தது.
தொழிற்சங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினர் இதில் கலந்துகொண்டனர்
ரணில் ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமானது, பயங்கரவாதத் தடைச்சட்டம் உள்ளிட்ட சட்டங்களை பயன்படுத்தி நாட்டுக்காகவும் நாட்டு மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காகவும் போராடியவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கமைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு 90 நாட்கள் தடுத்து வைக்கபபட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.