திரும்புகிறார்:பணக்கஸ்டத்தில் கோத்தா!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இலங்கை பயணம் மேலும் இரு வாரங்களுக்கு தாமதமாகும் என ரொய்ட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது.
பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் அதற்கு முன்னர் நாட்டிற்கு வருகை தருவார் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாய்லாந்தில் தங்குவதற்கான அதிக செலவுகள், முன்னாள் ஜனாதிபதியின் இலங்கைப் பயணத்தை துரிதப்படுத்துவதற்கு காரணமாக அமைந்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு சட்டத்தினால் வழங்கப்படும் சிறப்புரிமைகள் மற்றும் வசதிகள் கோட்டாபய ராஜபக்ஸவிற்கும் வழங்கப்பட வேண்டுமென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.