பயங்கரவாதத் தடைச்சட்டத்தைக் கைவிட வேண்டும் – கனடா
பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை மீள்பரிசீலனை செய்யுமாறு இலங்கை அதிகாரிகளை கேட்டுக்கொள்வதாக இலங்கைக்கான கனடா தூதுவர் டேவிட் மக்கினன் தெரிவித்துள்ளார்
டுவிட்டர் பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டம் ஜனநாயக நெறிமுறைகள் மற்றும் மனித உரிமைகளிற்கான மதிப்பு ஆகியவற்றிற்கு முரணாண விடயமாக காணப்படுவதால் இலங்கை அதிகாரிகள் அதனை பயன்படுத்துவதை கைவிடவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.