November 23, 2024

மைத்திரிக்கும் இறுகுகிறது பூட்டு!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (18) சுமார் 03 மணிநேரம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர் .

யுவோன் ஜோன்சன் என்ற 19 வயது யுவதியை கொலை செய்த (ரோயல் பார்க் படுகொலை) குற்றச்சாட்டில் மரண தண்டனை அனுபவித்து வந்த ஜூட் ஷமன் அந்தோனி ஜயமஹா என்பவர் ஜனாதிபதியினால் அரச பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்ட போது இடம்பெற்றதாக கூறப்படும் இலஞ்சம் தொடர்பான விசாரணையின் ஒரு அம்சமாக மைத்திரியிடம் வாக்குமூலம் பெறப்பட்டது

முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான அத்துரலியே ரதன தேரர் செய்த இரண்டு முறைப்பாடுகளின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் அந்தோனி ஜயமஹாவை விடுதலை செய்ய சில தரப்பினர் பணம் பெற்றுக்கொண்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனியார் தொலைக்காட்சி அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்ததாக அத்துரலியே ரத்ன தேரர் முறைப்பாடு செய்துள்ளார்.

அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அத்துரலியே ரதன தேரர் பற்றியும் மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.

கொழும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் வைத்து மைத்திரிபால சிறிசேனவிடம் இது தொடர்பான வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. ரோயல் பார்க் படுகொலை ஜூன் 20, 2005 அன்று இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert