அமெரிக்காவில் தங்க கீறீன் காட்டுக்கு விண்ணப்பிக்கிறார் கோட்டா
கடந்த மாதம் பொதுமக்களின் எதிர்ப்புக்கள் மத்தியில் நாட்டை விட்டு வெளியேறிய பதவி விலகிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, மீண்டும் அமெரிக்காவுக்குச் சென்று தனது மனைவி மற்றும் மகனுடன் அங்கு குடியேற அமெரிக்க கிரீன் கார்டைப் பெறுவதற்கு காத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அவரது மனைவி அயோமா ராஜபக்ச அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளதால், கிரீன் கார்டு பெறுவதற்கான விண்ணப்பத்தை அமெரிக்காவில் உள்ள ராஜபக்சேவின் சட்டத்தரணிகள் கடந்த மாதமே தொடங்கிவிட்டதாக உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நடைமுறையில் இப்போது கொழும்பில் உள்ள அவரது சட்டத்தரணிகள் கூடுதல் ஆவணங்களை இங்கு சமர்ப்பித்து வருகின்றனர்.
தற்போது தனது மனைவியுடன் தாய்லாந்தில் உள்ள ஹோட்டலில் இருக்கும் முன்னாள் ஜனாதிபதி, நவம்பர் மாதம் வரை தாய்லாந்தில் தங்குவதற்கான தனது ஆரம்ப திட்டத்தை இரத்து செய்துவிட்டு ஆகஸ்ட் 25 ஆம் திகதி மீண்டும் இலங்கை திரும்புவார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு,கோட்டாபாய ராஜபக்சே தனது சட்டவாளர்களுடன் கலந்தாலோசித்ததாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காக தாய்லாந்தில் முதலில் எதிர்பார்த்தபடி சுதந்திரமாக நடமாட முடியாததால் உல்லாச விடுத்திக்குள்ளே தங்குமாறு காவல்துறையினரால் அறிவுறுத்தப்பட்டார். இந்நிலையில் இந்த மாத இறுதியில் இலங்கை திரும்ப முடிவு செய்ததாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த மாதம் அவர் இலங்கைக்கு திரும்பியதும், ராஜபக்சேவுக்கு அரச இல்லம் மற்றும் முன்னாள் அதிபர் ஒருவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பை வழங்குவது குறித்து அமைச்சரவை ஆலோசிக்கவுள்ளது.
ராஜபக்சே கடந்த மாதம் மாலத்தீவுக்கு தப்பிச் சென்று அதன் பிறகு சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றார். மருத்துவ விசாவில் சிங்கப்பூருக்குள் நுழைந்த அவர், முடிந்தவரை அங்கேயே இருக்க இரண்டு முறை விசாவை நீடித்தார். அவரது விசாவை மேலும் நீட்டிக்க முடியாததால், ராஜபக்சேவும் அவரது மனைவியும் தாய்லாந்திற்குச் சென்றனர்.
மேலும் அவர் தனது மூன்றாவது இலக்கை இறுதி செய்யும் வரை அவர் அங்கேயே இருக்க முடியும் என்று உறுதியளிக்கப்பட்டது. இருப்பினும் தாய்லாந்தில் அவரது நடமாட்டம் தற்போது தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர் இலங்கை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.