நாமலிடம் ஏமாற்றப்பட்டு அழைக்கப்பட்ட யுவதி!
அண்மையில் இடம்பெற்ற பொதுநலவாய விளையாட்டு போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற நேத்மி அஹிம்சா ஏமாற்றப்பட்டு முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவிடம் அழைத்து செல்லப்பட்டதாக சிங்கள ஊடகம் ஒன்று சர்ச்சையான செய்தியை வெளியிட்டுள்ளது.
பிரதேச சபை உறுப்பினர் சாரதிக்கு வழங்கிய இரகசிய அறிவுறுத்தலின் பிரகாரம் விளையாட்டுத்துறை அமைச்சரின் வீட்டிற்கு செல்லுமாறு கூறியதாக கூறி சிறுமியை நாமல் ராஜபக்சவின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். விளையாட்டு அமைச்சருக்குப் பதிலாக அங்கு நாமலைப் பார்த்த நேத்மியும் பயிற்சியாளரும் ஆச்சரியமடைந்தள்ளனர். ஆனால் அவர்களால் அங்கு எதைச் செய்ய முடியவில்லை. நமாலின் மெய்ப்பாதுகாவலர்கள் தொலைபேசிகளை அணைக்குமாறு அறிவுறுத்தியதால் அவர்கள் தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தொலைபேசிகள் அணைக்கப்பட்டிருந்ததால், பாராட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குழம்பிபோயுள்ளனர். இதற்கிடையில் நேத்மி மற்றும் நாமலின் சந்திப்பு குறித்த செய்தியை நாமலின் உதவியாளர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட அது வைரலாகியிருந்தது. நேத்மி பின்னர் நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு வந்து விளையாட்டு அதிகாரிகளிடம் தங்களுக்கு நேர்ந்த விடயத்தை கூறியதும் அனைவரும் கவலையடைந்ததாக குறித்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.