காலிமுகத்திடல் சென்றால் நாடு கடத்தலாம்!
காலிமுகத்திடல் போராட்டம் தொடர்பில் சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்ட பிரித்தானிய பெண்ணான கெய்லி பிரேசருக்கு விசா வழங்குவதை நிறுத்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் முடிவு செய்துள்ளது.
எனவே அவர் ஓகஸ்ட் 15 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கையை விட்டு வெளியேறுமாறு இலங்கையின் குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
முன்னதாக, கெய்லி விசா நிபந்தனைகளை மீறியதால் அவரது கடவுச்சீட்டை இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் கைப்பற்றியிருந்தது.
விசாரணைக்காக 07 நாட்களுக்குள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் விளக்கமளிக்குமாறு கெய்லி பிரேசருக்கு அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.