வடக்கில் முன்பள்ளிகளுக்கு இராணுவப் பெயர்
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கண்ணகி நகர், பாற்கடற் பூங்கா, மயூரன் முன்பள்ளி ஆகிய முன்பள்ளிப் பாடசாலைகளுக்கு இராணுவத் தலையீட்டுடன் இராணுவ பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தார்.
இன்றையப் (09) பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், யுத்தத்துக்குப் பின்னர் இராணுவத்தின் சிவில் பாதுகாப்புப் பிரிவினர் வடக்கில் முன்பள்ளி பாடசாலைகளில் அத்துமீறி செயற்பட்டு வருகிறார்கள். ஆரம்பக் கல்வியை இராணுவ மயப்படுத்தி உலக சிறுவர் உரிமைச் சட்டங்களை மீறி, இராணுவ மயப்படுத்தப்பட்ட ஆரம்பக் கல்வியை வடக்குக், கிழக்கில் திணிக்க முனைவது இனவழிப்பின் இன்னொரு விதம் எனவும் தெரிவித்தார்.
முன்பள்ளி மாணவர்களுக்கு சிவில் பாதுகாப்புப் படையினரின் இலட்சணைப் பொறிக்கப்பட்ட சிரூடைகள் வழங்கப்படுகிறது. இது தொடர்பில் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜவுக்கு கடிதம் ஊடாக அறிவித்திருக்கிறேன் எனவும் தெரிவித்தார்.