இலங்கை நெருக்கடி: ஜனநாயக அரசாங்கத்தை உருவாக்க வாய்பளித்துள்ளது – அமெரிக்கா
இலங்கை நெருக்கடி அதிகளவு ஜனநாயக அரசாங்கத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது என அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் தெரிவித்துள்ளார்.
இலங்கை தற்போது சவாலான நெருக்கடியான தருணத்தில் உள்ளது ஆனால் அந்த நாட்டிற்கு அதிகளவு ஜனநாயக தன்மை மிக்க அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கான வாய்ப்புள்ளது என அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை கம்போடிய தலைநகரில் ஆசிய வெளிவிவகார அமைச்சர்கள் மாநாட்டில் சந்தித்தவேளை அமெரிக்க இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு சர்வதேச நாணயநிதியத்தின் உதவி கிடைப்பதற்கு அமெரிக்கா வழங்கும் உதவியை பாராட்டுவதாக அலி சப்ரி தெரிவித்துள்ளார்.