ரணில் ,தினேஷ் குழு கூட்டத்தை புறக்கணிக்க முடிவு!
ரணில் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இன்று நடைபெறவுள்ள ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டத்தை புறக்கணிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சுயேட்சை உறுப்பினர்கள் பலர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதித் தேர்தலில் முன்னிலையான நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட பதினாறு உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான பத்து அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களும் ஆளும் கட்சி குழுவை புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
எப்படியிருப்பினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அதே தீர்மானத்தில் இருப்பதால், அக்கட்சியைச் சேர்ந்த சிலர் மாத்திரம் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, லலித் எல்லாவல மற்றும் உதயன கிரிடிகொட ஆகியோருடன் 10 சுயேச்சை உறுப்பினர்கள் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பங்கேற்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ஆளும் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதில் பங்கேற்காமல் சுயேச்சையாக உறுப்பினர்கள் முடிவு எடுத்தால் அதுகுறித்து சபாநாயகரிடம் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது