யேர்மன் தலைநகரில் கண்காட்சிப்படுத்தப்பட்ட கறுப்பு யூலையின் இனப்படுகொலைகள்
யேர்மனியின் தலைநகர் பேர்லினில் கறுப்பு யூலை தமிழின அழிப்பின் 39 ஆம் ஆண்டு கவனயீர்ப்பு நிகழ்வு நகரமத்தியில் அடையாளப்படுத்தப்பட்டது. 1983 ஆம் ஆண்டு யூலை 23 ஆம் நாள் சிறிலங்கா இனவாதக் காடையர் கும்பலால் திட்டமிட்டு அழிக்கப்பட்ட எம் மக்களின் நினைவாக பேர்லின் நகரத்தில் இன்று (23.07.2022) சனிக்கிழமை நகரமத்தியில் கண்காட்சி நடாத்தப்பட்டது. அக் கண்காட்ச்சிப் பதாதைகளை யேர்மனிய மக்களும் பல்லினத்தவர்களும் பார்வையிட்டுச் சென்றனர். அத்தோடு அம் மக்களுக்கு தமிழ் இளையவர்களால் விளக்கங்களும் கொடுக்கப்பட்டது.