ராஜதந்திர வட்டாரங்களுடன் ரணில் கோபம்!
காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் மீதான தாக்குதல் குறித்து சர்வதேச தரப்புக்கள் தெரிவித்துள்ள விமர்சனஙகள் ரணிலை சீற்றமடையவைத்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.
ஒரே இரவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்க்காரர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து தனது ஆழ்ந்த கவலையை தெரிவிப்பதற்காக ஜனாதிபதியை சந்தித்ததாக ஜூலி சங் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
சிறந்த எதிர்காலத்திற்கான இலங்கையர்களின் அழைப்புகளுக்கு பதிலளிக்க, ஜனாதிபதி மற்றும் அமைச்சரவைக்கு ஒரு வாய்ப்பும் கடமையும் உள்ளது. குடிமக்களை ஒடுக்குவதற்கான நேரம் இதுவல்ல.
மாறாக, மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும், பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பவும் அரசாங்கம் எடுக்கக்கூடிய உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கைகளை எதிர்நோக்க வேண்டுமென அமெரிக்க தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் வர்த்தக முதலீட்டு உறவுகள் சிறந்த முறையில் உள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் தேசிய தொலைகாட்சிக்கு வழங்கிய விசேட செவ்வியொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்