போராட்டக்காரர்களை கலைக்க படையினரை பயன்படுத்தியமை கவலையளிக்கிறது – ஐ.நா
போராட்டக்காரர்களை கலைக்க படையினரை பயன்படுத்தியமை கவலையளிக்கிறது என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி தெரிவித்துள்ளார்.
அவர் தனது ருவிட்டர் பதிவிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
போராட்டக்காரர்களை கலைக்க பலத்தை பயன்படுத்தியதில் மிகுந்த கவலையளிக்கிறது. ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கு ஆர்ப்பாட்டங்களைக் கண்காணிக்க உரிமை உண்டு. அவற்றின் செயல்பாடுகள் தடைபடக் கூடாது.
எதிர்ப்புக்கள் மற்றும் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமையை முடக்கும் நடவடிக்கைகள் இலங்கையில் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரமின்மையை மோசமாக்கும்.
பரந்த பொது ஆலோசனைகளுக்கு இணங்க அமைதியான தீர்வுகள் முன்னோக்கி செல்லுவதற்கான வழி என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.