November 21, 2024

ராஜபக்சக்களது கூட்டு: திணறடித்த ஊடகங்கள்!

ஊடகவியலாளர்களது தடாலடியான கேள்விகளால் திணறிப்போய் சீற்றமடைந்துள்ளார் ரணில்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று மாலை கொழும்பு கங்காராம விகாரைக்கு விஜயம் செய்தார். இந்தப் பயணம் தனிப்பட்ட விஜயமாக திட்டமிடப்பட்டிருந்த போதிலும், ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அங்கு பிரித்தானியாவின் ‘ஸ்கை நியூஸ்’ ஊடகவியலாளர், இந்நாட்டு மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்றும், பழைய ராஜபக்ச ஆதரவாளரான நீங்கள் எப்படி அந்த மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள் என்றும் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

அப்போது சீற்றமடைந்த ரணில் நான் எப்படி ராஜபக்சக்களின் நண்பனாக இருக்க முடியும்? எனக்கு தெரிந்த காலத்திலிருந்தே அவர்களுக்கு எதிரானவர். இலங்கை மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை ஏற்படுத்த நான் தயாராக உள்ளேன். நான் ராஜபக்சக்களின் நண்பன் அல்ல, மக்களின் நண்பன். இன்னொன்றையும் கூறுகிறேன், ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடன் இணைந்து நான் இதற்கு முன்னர் பணியாற்றியுள்ளேன். நான் அவருக்கு வாக்களித்ததில்லை. அவர் ஒரு கட்சி, நான் இன்னொரு கட்சி.

நான் ராஜபகசக்களுடன் இணைந்து செயற்படுகிறேன் என்று கூறுவது நான் அவருடைய நண்பன் என்று அர்த்தமல்ல. எனக்கு கிடைக்கும் வாய்ப்புகள் மற்றும் எனது கட்சியை பலப்படுத்துவதற்கான வாய்ப்புகளை மட்டுமே பார்க்கிறேன் என்றார்.

புதிலளித்த போதும் விடாது ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்ப சலித்து சீற்றத்துடன் புறப்பட்டார் ரணில்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert