März 28, 2025

ஆமிக்கு வந்தனம் வைத்த ரணில்!

ஆட்சி மாற்ற போராட்டகாரர்களை இராணுவ பலம் மூலம் முடக்க ரணில் தயாராகிவருகினறார்.

ஏற்கனவே அலரிமாளிகை சூழலில் போராட்டங்களை முன்னெடுத்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த ரணில் பணித்திருந்த போதும் படை தலைமை உடன்பட்டிருக்கவில்லை.

 தற்போது ஜனாதிபதி என்ற வகையில் தனது கட்டளைகளை பிரயோகிக்க ரணில் தயாராகிவிட்டார். 

இந்நிலையில் பாராளுமன்றத்தில் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டிருந்த இராணுவம் மற்றும் பொலிஸாரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்துள்ளார்.

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் பாராளுமன்றத்திலிருந்து தனது வாகனத்தில் புறப்பட்டுச் சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  திடீரென தனது வாகனத்திலிருந்து இறங்கி அங்கிருந்த பாதுகாப்புத் தரப்பினருடன் கலந்துரையாடினார்.

இதன்போது பாராளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாத்தமைக்காக இராணுவம், பொலிஸாருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நன்றியையும் தெரிவித்துள்ளார். 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert