November 21, 2024

தியாகியானார் சஜித்?

 இன்று ஆரம்பமாகியது ஒரு ஒருமித்த பயணத்தின் தொடக்கமாகும் எனவும், நாடாளுமன்றத்திற்கு அப்பால் மக்களின் வாழ்வை கட்டியெழுப்பும் போராட்டத்திற்காக தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

இடைக்கால ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட தீர்மானித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இத்தருணத்தில் நாட்டு மக்களுக்காக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவித்த அவர்,இந்நாட்டின் அரசியலுக்கு உண்மையான புதிய கலாச்சாரத்தை அறிமுகப்படுத்த தன்னை அர்ப்பணிப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

இந்நாட்டு மக்களுக்கு ஜனநாயக உரிமைகளை வென்றெடுத்தவாறு பத்தொன்பதாவது அரசியலமைப்பு திருத்தத்தை மீண்டும் அமுல்படுத்துவதற்கும், நாட்டை பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் முன்னோக்கி கொண்டு செல்வதற்காக அர்ப்பணிப்புடன் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இந்நாட்டு மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதே ஒரே நோக்கம் எனவும் தெரிவித்தார்.

அதற்காக தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் தெரிவித்தார். இடைக்கால ஜனாதிபதி வேட்பாளராக முன்மொழியப்பட்ட டலஸ் அழகப்பெரும மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோர் கலந்து கொண்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (19) நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

இடைக்கால ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நாளை இடம்பெறுகிறது என்பதோடு, இதில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி என்பன தமது ஆதரவை நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு வழங்க தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert