November 23, 2024

ஜனாதிபதித் தெரிவு: பொருளாதாரம் மற்றும் அபிலாசைகளைக் கருத்திற்கொள்ள வேண்டும்!

ஜனாதிபதி தெரிவின்போது பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை கருத்த்திற்க்கொண்டும் தமிழ் கட்சிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் செயல்பட வேண்டுமென யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் ஜெல்சின் தெரிவித்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், வட கிழக்கு தமிழ் தரப்புகளுக்கு இது ஒரு முக்கியமான தருணம். இன்றைய காலகட்டத்தில் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை கருத்த்திற்க்கொண்டும் தமிழ் கட்சிகள் செயல்பட வேண்டும். நீங்கள் ஆதரிக்கும் வேட்பாளர் எமது தமிழ் மக்களின் கோரிக்கைகளையும் அபிலாசைகளையும் ஏற்கும் தருணத்தில் நடுநிலையாக செயல்படாமல் அந்த வேட்பாளருக்கு முழு ஆதரவை நீங்கள் வழங்க வேண்டுமென மாணவர் சமூகமாக நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்.

தென்னிலையில் மக்கள் அனைவரும் இக்கட்டான சூழலிற்கு தள்ளப்பட்ட வேளையில் அவர்களின் தலைவர்களுக்கு எதிராக மக்கள் போராடும் நிலைமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள். அதே நிலைமையை கருத்திற்க்கொண்டு உங்களுக்கு எதிராகவும் தமிழ் மக்கள் ஒரு காலகட்டத்தில் நம்பிக்கையை இழந்து செயல்படும் பட்சத்தில் மாணவர் சமூகமாக இருக்கின்ற நாங்கள் மக்களுடன் இணைந்து செயல்படுவோம் என சந்தர்ப்பத்தில் கூறிக் கொள்ள விரும்புகிறோம் என்றார்.

தமிழ் அரசியல் கட்சிகள் இந்த விடயத்தில் கருத்து வேறுபாடுகளை விட்டு சிறந்த ஜனாதிபதியை தெரிவு செய்ய வேண்டும் என யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய செயலாளர் அபிராஜ் தெரிவித்தார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert