மலேசியாவில் 18 மில்லியன் டொலர் பெறுமதியான விலங்குகளின் பாகங்களை கைப்பற்றப்பட்டன!!
மலேசியாவில் 18 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அரிய வகை விலங்குகளின் பாகங்களைக் மலேசிய சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
ஆபிக்காவிலிருந்து வந்ததாகக் கருதப்படும் யானைத் தந்தங்கள், காட்டாமிருகத்தின் கொம்புகள், பாங்கோலின் செதில்கள் (ஓடுகள்) கைப்பற்றியுள்ளனர்
ஜூலை 10 அன்று மலேசியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள போர்ட் கிளாங்கில் மரக்கட்டைகளுடன் ஒரு கொள்கலனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத சரக்குகளை அதிகாரிகள் கண்டுபிடித்தபோது கடத்தல் முயற்சியை முறியடித்தனர்.
இந்த கப்பலில் 6,000 கிலோகிராம் (13,200 பவுண்டுகள்) யானை தந்தங்கள் இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மலேசியாவின் மிகப்பெரிய ஒற்றை யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டதாக சுங்கத் துறைத் தலைவர் ஜாசுலி ஜோஹன் தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட விலங்குகளின் பாகங்களின் மதிப்பு 80 மில்லியன் ரிங்கிட் ($18 மில்லியன்) என மதிப்பிடப்பட்டுள்ளது. இவை ஆப்பிரிக்காவில் இருந்து வந்ததாக நம்பப்படுகிறது என்றார்.
பாகங்கள் கடத்தப்பட்ட கப்பலின் இறுதி இலக்கு மலேசியா இல்லை என்று கூறினார். ஆனால் அது எங்கு கடத்திச் செல்ல திட்டமிடப்பட்டது என்பதை அவர் குறிப்பிடவில்லை.
29 கிலோகிராம் காண்டாமிருக கொம்புகள், 100 கிலோ பாங்கோலின் செதில்கள் மற்றும் 300 கிலோ விலங்கு மண்டை ஓடுகள் மற்றும் பிற எலும்புகள் இருந்தன என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
யானை தந்தங்கள் மற்றும் பாங்கோலின் செதில்கள் போன்ற விலங்கு பாகங்கள் சீனா மற்றும் வியட்நாம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் நாடுகளில் பிரபலமாக உள்ளன.
கடத்தலுடன் தொடர்பாக யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
தென்கிழக்கு ஆசிய நாடு வனவிலங்குகளின் கடத்தலுக்கான மையமாக உள்ளது. விலங்குகளின் பாகங்கள் நாடு முழுவதும் இலாபகரமான பிராந்திய சந்தைகளுக்கு அனுப்பப்படுகின்றன.