November 21, 2024

கோட்டாவை சிங்கப்பூரிலிருந்து வெளியேற பணிப்பு

 கோட்டாபய  தொடர்ந்து சிங்கப்பூரில் தங்கியிருப்பதால் பாதுகாப்புச் சிக்கல்கள் ஏற்படலாம். எனவே பதினைந்து நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், கோட்டாபய ராஜபக்சவை நேற்று சந்தித்த சிங்கப்பூர் அமைச்சர் காசிவிஸ்வநாதன் சண்முகம், சிங்கப்பூர் அரசால் இனி பாதுகாப்பு அளிக்க முடியாது எனவும், நாட்டை விட்டு15 நாட்களுக்குள் வெளியேறும்படி கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக சிங்கப்பூரில் கோ ஹோம் கோட்டா எதிர்ப்பலைகள், கோஷங்கள் ஒலிக்க ஆரம்பித்த நிலையில் கோட்டாபய ராஜபக்சவிற்கு சிங்கப்பூரில் அடைக்கலம் வழங்கப்படவில்லை, தனிப்பட்ட விஜயமாகவே வந்துள்ளதாக சிங்கப்பூர் அரசு ஊடகங்களுக்கு அறிவித்திருந்தது. இந்த நிலையிலேயே பாதுகாப்பு காரணங்களைக் கூறி கோட்டாபய ராஜபக்சவை 15 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறும்படி கூறப்பட்டுள்ளது.

 இதே நேரம் சிங்கப்பூரில் இருந்து கோட்டாபய ராஜபக்ச சவூதி செல்வார் எனக் கூறப்பட்ட போதும் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை. அவர் சிங்கப்பூரிலேயே தங்கியுள்ளார்.

காவியன்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert