கோத்தா வருகிறார்:சிங்கப்பூரில் காத்திருக்கும் ஊடகங்கள்!
இலங்கை விமானப்படை விமான மூலம் தப்பித்த கோத்தா தனியார் ஜெட் விமானம் மாலைத்தீவில் இருந்து சிங்கப்பூர் ஊடாக அரேபிய நாட்டிற்கு தப்பிக்கவுள்ளார்.
சிங்கப்பூர் பயணிப்பதற்காக குறித்த தனியார் ஜெட் விமானத்தின் வருகைக்காகவே, கோட்டாபய ராஜபக்ஷ, அவரது மனைவி மற்றும் பாதுகாவலர்கள் நேற்றிலிருந்து காத்திருந்துள்ளனர்.
இந்நிலையிலேயே, தனியார் ஜெட் விமானம் மாலைத்தீவில் தற்போது தரையிறங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மாலைதீவிலிருந்து புறப்பட்டு சிங்கப்பூருக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுவதால் சிங்கப்பூர் Changi விமான நிலையம் முன்பாக கமராக்களுடன் காத்திருக்கும் ஊடகவியலாளர்கள். ஆனால், மாலைதீவிலிருந்து அவர் எப்போது புறப்படுவார் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
இதனிடையே கோத்தபாயவை காப்பாற்றி அனுப்பி வைத்த> பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க இராஜினாமா செய்யாவிட்டால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுவதற்கு சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவது தொடர்பில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளுடனும் கலந்துரையாடவுள்ளதாக தயாசிறி ஜயசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் மூலமே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு தீர்வை வழங்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.