இன்னிரவு முதல் வெதுப்பக பொருட்களின் விலை அதிகரிப்பு
இலங்கையில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு முதல் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. ஏனைய வெதுப்பகப் பொருட்கள் 10 ரூபாவினால் அதிகரிக்கப்படும் எனவும் அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் (ACBOA) தெரிவித்துள்ளது.
அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தலைவர் ஜயவர்தன கூறுகையில்:-
நேற்றைய தினம் முதல் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 32 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜயவர்தன இன்று தெரிவித்துள்ளார்.
உள்ளூர் சந்தையில் முன்பு ரூ.84.50க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கோதுமை மா, தற்போது ரூ.300க்கு மேல் விற்கப்படுகிறது.
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 400 ரூபாவை தாண்டவில்லை, ஆனால் உள்ளூர் சந்தையில் மாவின் விலை 300 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் அதன் மூலம் கோதுமை மாவின் விலை 400% அதிகரித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.