November 21, 2024

உன்னிப்பாக அவதானிக்கிறோம் – அமெரிக்கத் தூதுவர்

ஆர்ப்பாட்டங்கள் அமைதியாக நடைபெற வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.  ஆர்ப்பாட்டம் செய்யும் உரிமையை சகலரும் உறுதிப்படுத்த வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார். 

நேற்று கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவரின் இல்லத்தில்  நடத்திய   ஊடகவியலாளர்களுடன் சந்திப்பிலேயே  அவர் இதனை குறிப்பிட்டார். 

அவர்  மேலும் குறிப்பிடுகையில்:-

வரிசையில் காத்திருந்த ஒரு சிவிலியன் மீது இராணுவ அதிகாரி தாக்குதல் நடத்திய காணொளியை நானும் பார்த்தேன்.  அது முழு நாட்டுக்கும் ஒரு நல்ல சமிக்ஞையை வெளிப்படுத்தவில்லை. 

பாதுகாப்பு தரப்பினர் நாட்டு மக்களை பாதுகாப்பதற்கும் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

எனவே பாதுகாப்பு தரப்பினர் எவ்வாறு இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தமது நடவடிக்கைகளை  மேற்கொள்கின்றனர் என்பதை நாங்கள் உன்னிப்பாக அவதானிக்கிறோம். 

அரசியல் மறுசீரமைப்பை தவிர்த்து நீங்கள் பொருளாதார நெருக்கடியை மட்டும்  தீர்க்க முயற்சிக்க முடியாது.   நெருக்கடிக்கு மத்தியில் இரண்டு துறைகளிலும் மறுசீரமைப்பை கொண்டு வருவதற்கு சிறந்த சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. 

அமெரிக்கா இலங்கையின் நீண்ட கால நண்பனாக இருக்கிறது.  70 வருட காலமாக இலங்கைக்கு உதவிகளை செய்து வந்திருக்கிறோம்.   நெருக்கடி இருக்கிறதோ இல்லையோ நாம் இலங்கையின் சிறந்த நண்பனாக தொடர்ந்திருப்போம்.  இதில்   தனிப்பட்ட நபருக்கோ கட்சிக்கோ நாங்கள் ஆதரவளிப்பதில்லை.  மாறாக இலங்கை மக்களுக்கு எமது ஆதரவை தெரிவிக்கிறோம்.  

ஆர்ப்பாட்டங்கள் அமைதியாக நடைபெற வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.  ஆர்ப்பாட்டம் செய்யும் உரிமையை சகலரும் உறுதிப்படுத்த வேண்டும். 

அதேநேரம் சட்டத்தின் ஆட்சிபடுத்தல் உறுதிப்படுத்தப்படவேண்டும்.   மக்கள் வன்முறையை நாடக்கூடாது.  சொத்துக்களை அழிக்கக்கூடாது.  வரிசையில் காத்திருந்த ஒரு சிவிலியன் மீது இராணுவ அதிகாரி தாக்குதல் நடத்திய காணொளியை நானும் பார்த்தேன். 

அது முழு நாட்டுக்கும் ஒரு நல்ல சமிக்ஞையை வெளிப்படுத்தவில்லை.  பாதுகாப்பு தரப்பினர் நாட்டு மக்களை பாதுகாப்பதற்கும் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.   

எனவே பாதுகாப்பு தரப்பினர் எவ்வாறு இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தமது நடவடிக்கைகளை  மேற்கொள்கின்றனர் என்பதை நாங்கள் உன்னிப்பாக அவதானிக்கிறோம்.  எனவே இதில் சாவகாசமாக பாதுகாப்பு தரப்பினரை ஈடுபடுமாறு கோருகின்றோம். 

தற்போதைய சூழலில் சர்வதேச நாணயம் நிதியமே இலங்கைக்கான ஒரே தெரிவாக இருக்கின்றது.   இலங்கை அவ்வாறு நம்புகிறது.  உலகப் பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட சகலரும் இது தொடர்பாக பேசுகின்றனர்.  இலங்கை  சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டும் என்பதே சகலரும் வலியுறுத்துகின்றனர். 

அமெரிக்கா இலங்கை மக்களுக்கு உதவி செய்கிறது.  எமது உதவி எமது ஒத்துழைப்பு நட்பு என்பது பதவியில் இருக்கின்ற ஜனாதிபதி உடனானது அல்ல. பிரதமர் உடனானதல்ல. 

இலங்கை மக்களுடனானதாகும். இலங்கையில் ஆட்சி மாற்றம் நடைபெற்றதுடன் சர்வதேச நாடுகள் உதவி செய்வதற்கு காத்துக் கொண்டிருக்கின்றன என்ற விடயம் தவறானது. 

காரணம் வரிசைகளில் நிற்பது சாதாரண மக்கள்.   மேலும் கடன் மறுசீரமைப்பு செய்யப்படாத நாடு ஒன்றுக்கு சர்வதேச நிறுவனங்கள் உடனடியாக கடன் வழங்காது.  எனவே சர்வதேச நாணய நிதியமே இருக்கின்ற ஒரே வழியாகும்.  

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் இணை அனுசரணை நாடுகளில் அமெரிக்கா மீண்டும் இணைந்திருக்கிறது.

அந்தவகையில் எனது யாழ். விஜயம் மற்றும் அங்கு நடத்திய சந்திப்புகளுக்கு ஒரு நோக்கம் இருந்தது.  அதாவது பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மனித உரிமை மற்றும் பொறுப்பு கூறல் விடயத்தை  தவிர்க்க முடியாது. 

கடந்த காலங்களில் மிக கடினமான நிலைமைகளை இலங்கை எதிர்கொண்டது.  சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராயப்பட வேண்டும்.  காணாமல் போனவர் அலுவலகம் உள்ளிட்ட நிறுவனங்கள் அதிக வேலைகளை செய்யவேண்டியிருக்கிறது

இலங்கை ரஷ்யாவிடம் உதவிகளை பெற்றுக் கொள்வது தொடர்பாக அமெரிக்க எந்த கட்டுப்பாட்டையும் விதிக்கவில்லை.  ஆனால் ரஷ்யாவிடம் இருந்து அமெரிக்காவுக்கு எரிபொருள் இறக்குமதி  செய்வதை நாம் தடை செய்துள்ளொம். எமக்கு அந்த ஏரிபொருள்  எரிசக்தி கொள்ளளவு போதுமானளவு இருக்கின்றது. 

ஆனால் உலக அளவில் ரஷ்யாவுக்கான வங்கி முறை  போக்குவரத்து முறை என்பன தடை செய்யப்பட்டுள்ளன.  அது தொடர்பாக இலங்கை புரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கையில் அமெரிக்க இராணுவ தளத்தை எம்.சி.சி. உடன்படிக்கை ஊடாக நிறுவப்போவதாக தவறான செய்தி பரப்பப்பட்டது.  அமெரிக்க இராணுவ தளத்தில் இலங்கையில் நிறுவும் நோக்கம் எமக்கு  இல்லை.  ஆனால் இன்னும் மக்கள் அதனை என்னிடம் கேட்கின்றனர்.   

உலக அளவிலும் எம்.சி.சி  உடன்படிக்கை செய்திருக்கின்றோம்.  நேபாளம் அண்மையில் அதனை அங்கீகரித்து இருக்கிறது.  அந்த சந்தர்ப்பத்தை இலங்கை இழந்துவிட்டது தற்போது எம்.சி,சியை  கொண்டுவரும் எவ்விதமான நகர்வுகளும் இடம்பெறவில்லை.  எதிர்காலத்தில் இது தொடர்பில் பரிசீலனைகள் வரலாம் . 

பொருளாதார அரசியல் மறுசீரமைப்பு  அவசியம் என்பதை நாம் வலியுறுத்துகிறோம்.  அதனை எவ்வாறு செய்வது என்பதை இலங்கை மக்களும் அரசாங்கமும் தீர்மானிக்க வேண்டும்.  அரசியலமைப்பு மறுசீரமைப்பா அல்லது காபந்து அரசாங்கமா என்பதை இலங்கையே  தீர்மானிக்க வேண்டும்.   

ஜெனிவா பிரேரணை விவகாரம் தொடர்பாக தற்போது பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன.  அதன் முன்னேற்றம் எவ்வாறு இருக்கின்றது என்பதை பார்க்க வேண்டும்.  மனித உரிமை மற்றும் பொறுப்புக்கூறல்  விடயங்கள்  நிலுவையில் இருக்கின்றன.  பயங்கரவாத தடை  சட்டத்தை    சர்வதேச நியமத்துக்கு அமைவாக திருத்தவேண்டும்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert