ஜீலை 9:கோத்தாவிற்கெதிராக பாரிய போராட்டம்!

July 9 Go Home Gota Protest in Colombo Sri Lanka
எதிர்வரும் 9ம் திகதி கோத்தா அரசிற்கு எதிராக பாரிய போராட்டத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
போராட்டத்திற்கான ஆதரவை கோரி யாழிலும் தொடர்கூட்டங்கள் நடாத்தப்பட்டுவருகின்றது.
இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது அரசாங்கத்தை இராஜினாமா செய்யக் கோரி கொழும்பில் ஜூலை 9 ஆம் திகதி திட்டமிடப்பட்டுள்ள பாரிய மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அனைத்து உணவு விற்பனை நிலையங்களும் அன்றைய தினம் மூடப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
ஜூலை 9 ஆம் திகதி காலி முகத்திடலை நோக்கிய அரசாங்கத்திற்கு எதிரான பாதயாத்திரையில் சிவில் அமைப்புகளுடன் ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி உட்பட பல்வேறு கட்சிகளும் பங்கெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.