உக்ரைனில் போரிட்ட பிரேசில் மொடல் அழகி ரஷ்யத் தாக்குதலில் பலி!

Brazilian Thalita do Valle, the rescuer and sniper who was killed in Kharkiv, Ukraine in the end of June 2022. (Newsflash)
உக்ரைனுக்கு ஆதரவாக போரில் ஈடுபட்ட பிரேசில் மாடல் அழகி தலிதா டோ வாலே கடந்த வாரம் யுன் 30 திகதி ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டார்.
துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்ற 39 வயதான அவர் கார்கிவ் நகரில் பதுங்கு குழியில் இருந்தபோது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
தலிதாவைக் கண்டுபிடிக்க சென்ற முன்னாள் பிரேசில் இராணுவ வீரர் டக்ளஸ் புரிகோவும் கொல்லப்பட்டார்.
ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ்க்கு எதிராக போரிட்டு அதனை தனது யூடியூப் சேனலில் ஆவணப்படுத்திய தலிதா டோ வாலே, கடந்த 3 வாரங்களாக ரஷ்யா – உக்ரைன் போர் தொடர்பாகவும் வீடியோ வெளியிட்டு வந்தார்.