பொஸ்பரஸ் குண்டுகளை வீசுகிறது ரஷ்யா – உக்ரைன் குற்றச்சாட்டு
கருங்கடலில் உள்ள உக்ரைனின் பாப்பும் தீவிலிருந்து ரஷ்யப் படைகள் பின்வாங்கிய ஒரு நாளுக்குப் பின்னர் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியன் தீபகற்பத்தில் இருந்து புறப்பட்ட இரு ரஷியன் Su-30 போர் விமானங்கள் பாம்புத் தீவு மீது பொஸ்பரஸ் குண்டுகளை வீசித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக உக்ரேனிய இராணுவத்தின் தளபதி வலேரி ஜலுஷ்னி வெள்ளிக்கிழமை டெலிகிராமில் தெரிவித்தார்.
தாக்குதல்கள் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் இரண்டு தடவைகள் விமானங்கள் பொஸ்பரஸ் குண்டுகளை வீசித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
கருங்கடலில் உள்ள உக்ரேனிய துறைமுகங்களில் இருந்து பாதுகாக்கப்பட்ட தானிய ஏற்றுமதிகளை ஒழுங்கமைக்கும் ஐ.நா. முயற்சிகளில் மாஸ்கோ தலையிடாது என்பதை நிரூபிக்கும் வகையில், வியாழன் அன்று தீவில் இருந்து பின்வாங்குவதை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.