November 21, 2024

யேர்மனியில் காணாமல் போன சிறுவன் 8 நாட்களின் பின் சாக்டையிலிருந்து உயிரிருடன் மீட்பு1

யேர்மனியில் காணாமல் போன 8 வயதுச் சிறுவன் 8 நாட்களின் பின்னர் கழிவு நீர் ஓடும் சாக்கடைக்குள் இருந்து உயிருடன் மீட்கப்பட்டார்.

ஜோ என்று மட்டுமே பெயரிடப்பட்ட எட்டு வயது சிறுவன் ஜூன் 17 அன்று ஓல்டன்பர்க்கில் உள்ள தனது குடும்பத் தோட்டத்திலிருந்து காணாமல் போனார்.

காணாமல் போன சிறுவனை கடந்த 8 நாட்களாக காவல்துறையினர் பொியளவில் தேடுதல்களை நடத்தியும் அச்சிறுவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. 

ஒரு வழிப்போக்கர் ஒரு கழிவு நீர் ஓடும் சாக்கடை மூடியிலிருந்து முனுகல் சத்தத்தைக் கேட்டபோது, காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு காணாமல் போன சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டார். குறித்த கழிவு நீர் ஓடும் நிலக்கீழ் வாய்கால் சிறுவனின் வீட்டிலிருந்து 300 மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.

சிறுவன் காணாமல் போன நாளில் நிலக்கீழ் சாக்கடை வாய்காலில் ஊர்ந்து சென்றதாக நம்பப்படுகிறது. சிறுவன் காணாமல் போனதற்காக கூறப்படும் காரணங்களை காவல்துறையினர் நிராகரித்துள்ளனர். 

தீயணைப்பு வீரர்கள் சிறுவனை சாக்கடையில் இருந்து மீட்டனர். அவரின் உடலில் மிகக்குறைந்த உடல்சூடு இருந்ததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அச்சிறுவனுக்கு பெரிய காயங்கள் எதுவும் இல்லை.

பொதுமக்களின் உதவிக்குறிப்புக்கு காவல்துறை நன்றி தெரிவித்துள்ளது. நாங்கள் ஒரு கழிவுநீர் அமைப்பில் ஜோவைக் உயிருடன் கண்டுபிடிக்க முடிந்தது. அவர் நன்றாக இருக்கிறார். நாங்கள் அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விடலாம் என்று காவல்துறைத் தலைவர் ஜோஹன் குஹ்மே கூறினார்.

சிறுவனின் தந்தை உள்ளூர் ஊடகத்திடம் ஜோ நன்றாக இருக்கிறார் செயல்படுகிறார் என்று கூறினார்.

சிறுவன் எப்படி சாக்கடையில் விழுந்தான் என்ற ஊகங்கள் இருந்தன. ஆனால் செவ்வாயன்று அவர் உள்ளே ஊர்ந்து சென்று காணமால் போனார்  என்று கூறப்பட்டுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert