மனிதக் கடத்தல்: டிரக் கொல்கலனில் 46 உடலங்கள் மீட்பு!
அமெரிக்காவின் டெக்சாஸின் சான் அன்டோனியோவில் ஒரு பாரவூர்தி கொல்கலனுக்குள் குறைந்தது 46 பேர் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் மனித கடத்தல் முயற்சி எனத் தெரியவந்துள்ளது. சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற பாரவூர்த்தி தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றபோது அவர்கள் குறித்த இடத்திற்குச் சென்று பாரவூர்த்தியைச் சோதித்தனர். அப்போது மனிதர்கள் உள்ளே இறந்து கிடப்பது தெரியவந்தது
கொல்லகனில் உயிருடன் இருந்த மேலும் 16 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர்களில் 4 பேர் சிறார்கள் என சான் அன்டோனியோ தீயணைப்புத் தலைவர் சார்லஸ் ஹூட் கூறினார்.
உயிருடன் மீட்கப்பட்டவர்கள் அதிக வெப்பத்தினாலும் சோர்வினாலும் பாதிக்கப்பட்டிருந்தனர். அங்கு குடிப்பதற்கு தண்ணீர் இருந்தமைக்கான எந்தவொரு அறிகுறிகளும் இருக்கவில்லை.
கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட குளிரூட்டப்பட்ட பாரவூர்தியில் கொல்கலனில் ஏர் கண்டிஷனிங் யூனிட் எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.