செத்துக்கொண்டிருக்கின்றது கொழும்பு?
இலங்கையின் தலைநகர் கொழும்பு உட்பட பல பகுதிகள் முடக்க நிலையினை அடைந்துள்ளன.எரிபொருள் இன்மையால் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் வர்த்தக நிலையங்கள் பெரும்பாலும் மூடப்பட்டே வருகின்றது.
இதனிடையே இவ்வாண்டு டிசம்பர் வரை 3 மணித்தியால மின் வெட்டு தொடரும்− பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதேவேளை இலங்கையில் எரிபொருள் நெருக்கடி காரணமாக பெரும்பாலான ரைடர்கள் (டெலிவரி செய்பவர்கள்) தங்கள் சேவைகளைச் செய்ய முடியாமல் போயிருந்தாலும், இலங்கையை விட்டு வெளியேறும் திட்டம் இல்லை என்று UberEats கூறியுள்ளது.
Uber Eats இலங்கையை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் அதனை மறுத்துள்ள Uber Eats எரிபொருள் நெருக்கடி மற்றும் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக தமது உணவு விநியோக எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் கூறியுள்ளது. .
மே மாதம், எரிபொருள் பற்றாக்குறை இருந்தபோதிலும், Uber Eats Sri Lanka புதிய வருவாய் வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் முன்முயற்சிகளை அறிவித்தது, இதில் உணவு மற்றும் உணவு பொருட்கள் விநியோகத்திற்காக சைக்கிள்களை அறிமுகப்படுத்துதல் மற்றும் ரேஷன் கிட்களை விநியோகித்தல் ஆகியவை அடங்கும்.