காளை அடக்கும் நிகழ்வு: கொலம்பியாவில் 5 பேர் பலி! 300 பேர் காயம்!
கொலம்பியாவின் மத்திய பகுதியில் நடைபெற்ற காளையை அடக்கும் போட்டியில் விளையாட்டுத் திடலில் அமைந்திருந்த மரத்திலான பார்வையாளர் அரங்கதின் ஒரு பகுதிய இடிந்து வீழ்ந்தலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 300 பேர் காயமடைந்தனர்.
காளையை அடக்கும் போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழை கொலம்பியாவின் மத்திய மாநிலமான டோலிமாவின்ன் மேற்கு நகரமான எல் எஸ்பினலில் உள்ள விளையாட்டுத் திடலில் நடைபெற்றது.
„கொரலேஜா“ எனப்படும் பாரம்பரிய காளை அடக்கும் விளைட்டு நடைபெறுவது வழமை. நிகழ்வின் போது காளை அடக்குவதற்கு பார்வையாளர்கள் போட்டி வளையத்தினுள் நுழைந்தனர் அப்போது பார்வையாளர் அரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்தது.
5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 500 பேர் காயமடைந்தனர் எனத் தகவல்கள் வெளியாகின. பார்வையாளர்கள் அலறியபடி அங்கிருந்து தப்பி ஓடும் காட்சிகளை காணொளிகள் காண்பிக்கின்றன.
இறந்தவர்களில் இரண்டு பெண்கள், ஒரு ஆண் மற்றும் ஒரு குழந்தை அடங்குவதாக டோலிமா ஆளுநர் ஜோஸ் ரிக்கார்டோ ஓரோஸ்கோ தெரிவித்தார்.
மருத்துவமனைகள் 322 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன. அவர்களில் நான்கு பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர் என்று பிராந்தியத்தின் சுகாதார அதிகாரி கூறினார்.
ஜனாதிபதிப் பொறுப்பிலிருந்து வெளியேறும் இவான் டுக் விசாரணை நடத்தப்படும் என்று கூறினார், அதே நேரத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ உள்ளூர் அதிகாரிகளை இதுபோன்ற நிகழ்வுகளை தடை செய்யுமாறு வலியுறுத்தினார்.