November 22, 2024

கோத்தாவையே திட்டி தீர்க்கும் மருத்துவர்கள்!

இலங்கையில் கோத்தபாயவை ஆட்சி கதிரையேற்ற பாடுபட்ட மருத்துவ அதிகாரிகள் சங்களம் தற்போது காறி துப்ப தொடங்கியுள்ளது.

 இலங்கையில்  அத்தியாவசிய மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் பலவற்றின் கையிருப்பு மருத்துவமனைகளில் தீர்ந்து வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) மீண்டும் எச்சரித்துள்ளது

தற்போது சில அரச மருத்துவமனைகளில் குறைந்த எண்ணிக்கையிலான மருந்துகள் மாத்திரமே உள்ளன. அவற்றின் கையிருப்பு வேகமாகத் தீர்ந்து வருவதாக GMOA உறுப்பினரான வைத்தியர் பிரசாத் கொலம்பகே தெரிவித்தார்.

நிபுணர்களின் கவலைகள் இருந்தபோதிலும், அரச மருத்துவமனைகளுக்குத் தேவையான அனைத்து மருந்துகளும் தன்னிடம் இருப்பதாக விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் கூறியதாக அவர் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சர் கூறியது உண்மையாக இருந்தால், தற்போது மூலோபாய பிரச்சினை இருப்பதாக அவர்கள் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் உள்ள அந்தந்த மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்து இருப்புகள் வழங்கப்படுவதை உறுதி செய்வது சுகாதார அமைச்சரின் பொறுப்பாகும்.

மருந்தின்றி வைத்தியசாலை ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

தேசிய கண் மருத்துவமனையில் ஒரே ஒரு நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து மாத்திரம் இருப்பதாகவும், ஊழியர்கள் வேறு மாற்று மருந்துகளை வழங்க முடியாத நிலையில் இருப்பதாக தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கையிருப்பு குறைவாக உள்ள அல்லது விரைவாக கையிருப்பில் தீரும் மருந்துகளின் பட்டியல் தங்களிடம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாட்டில் மருந்துகளின் விலை அதிகரிப்பு காரணமாக வைத்தியர்கள் மற்றும் நோயாளிகள்  பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert