வல்வையின் தீருவில் மைதானத்தில் வைர விழாவை முன்னிட்டு வட மாகாண ரீதியாக 87 கழகங்கள் பங்குபற்றிய 9 பேர் உதைபந்தாட்ட போட்டி
வல்வையின் தீருவில் மைதானத்தில் பாடியது #பாடும்மீன்கள் நீண்ட வருட இடைவெளிக்குப் பின்பு இறுதியில் உறுதியாய் வடமராட்சி தொடரில் வடமாகாண கிண்ணத்தை கைப்பற்றியது #பாடும்மீன்வல்வை வைர விழாவை முன்னிட்டு வட மாகாண ரீதியாக 87 கழகங்கள் பங்குபற்றிய 9 பேர் உதைபந்தாட்ட போட்டியின் இறுதிப்போட்டி நேற்று இடம்பெற்றது இப்போட்டியில் பாடும்மீன் கழகத்தை எதிர்த்து கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் விளையாட்டுக்கழகம் மோதியது பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆரம்பமான இப்போட்டியில் இரு அணிகளும் யார் வல்லவர் என்ற நோக்குடன் ஆரம்பித்த போட்டி ஆரம்பம் முதலே இரு அணிகளும் சளைக்காமல் மோதிக்கொண்ட வேளையில் றேஞ்சர்ஸ் வி.க தடுப்பாட்டதினை வழங்க பாடும்மீன் கழகம் கோல் முகப்புக்களை ஆக்கிரமித்த வண்ணமாகவே போட்டி சென்று கொண்டிருந்தது பின்பு முதல் பாதி எவ்வித கோல்களும் போடாமல் நிறைவுபெற்றது.இரண்டாம் பாதியில் போட்டியின் போக்கு பாடும்மீன்கள் பக்கம் அனல் பறக்க மைதானம் முழுவதும் ஆரவாரமாக இருந்தது அதே ஆரவாரத்துடன் முதல் கோல் அணிக்காக #சாந்தனினால் பெறப்பட போட்டி களைகட்டியது பின்பு எத்திசையிலும் எப்பாகத்திலும் பந்தின் அசைவுகள் யாவுமே பாடும்மீன் வசமாகவே மாறியது பின்பு பின்களம் மத்தியகளம் முன்களம் மூன்றும் முழு வேகத்துடன் இயங்கிய நேரத்தில்மாற்று வீரராக இறங்கிய #விசோத்தினால்அணிக்கு 2வது கோலும் பெறப்பட்டது பின்பு போட்டியின் தன்மை முழுமையாகவே பாடும்மீன்களாகவே மாறியது இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் வல்வையின் வைரவிழா கிண்ணத்தை றேஞ்சர்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் ஆகியது பாடும்மீன் அணிவாழ்த்துக்கள் வீரர்களே