November 22, 2024

யாழில் ஐ.நா அலுவலகம் முன் கொடும்பாவி எரிப்பு!

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரிஸின் உருவபொம்மையை எரித்து யாழ்ப்பாணத்திலுள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகரின் கள அலுவலகத்திற்கு முன்னால் இன்றைய தினம் போராட்டம் இடம்பெற்றது.

அரசாங்கம் தவறான கருத்துக்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்துள்ளதாக கூறி அதற்கு எதிராக இன்று  ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் கைலாசப் பிள்ளையார் கோவில் அருகில் போராட்டமொன்றை மேற்கொள்ள சிவில் அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன.

அந்த வகையில் இன்று காலை 10.30 மணிளவில் நல்லூர் கைலாச பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள் பேரணியாக ஜக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு வந்தடைந்தனர்.

அதன் போது இலங்கை வெளிவிவகார அமைச்சர் பீரிஸ்,ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் தெரிவித்துள்ள கருத்துக்களை கண்டித்து அதற்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன் அமைச்சரின் உருவப்படத்தை தீயிட்டுக் கொளுத்தினர். போராட்டத்தின் நிறைவில், போராட்டக்காரர்கள் ஐக்கியநாடுகள் அலுவலகத்திற்கு தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரினை கையளித்தனர்.

போராட்டத்தில் அரசியல் கைதிகளின் உறவுகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் சமூகத்தினர் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert