இலங்கைக்கு திரும்புவேன்:சுகாஸ்
நான் நிச்சயம் விரைவில் இலங்கைக்கு திரும்புவேன். உங்களது விசாரணைகளுக்கு முகங்கொடுப்பேன். ஏனென்றால் எனது கைகள் சுத்தமானவை. எனது செயற்பாடுகள் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டவை. நீங்கள் எனது குரலை அடக்கலாமே தவிர என் குரல்கள் தாங்கிவரும் கொள்கையை ஒருபோதும் அடக்கமுடியாது” என இலங்கை காவல்துறையின் பயங்கரவாத குற்றப்புலனாய்வு பிரிவுக்கு சுகாஸ் தெரிவித்துள்ளார்.
எனது குரலை அடக்கலாமே தவிர குரல்கள் தாங்கிவரும் கொள்கையை ஒருபோதும் அடக்கமுடியாது” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான க.சுகாஸ் தெரிவித்துள்ளார்.
சட்டத்தரணி சுகாஸ் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் நான் நாட்டிலில்லாத தருணத்தில் எனது வீட்டிற்குச் சென்று என்னை விசாரிக்க வேண்டுமென்று அச்சுறுத்துவது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினருக்கு தெரிவித்துள்ளார்.
சர்வதேச கருத்தமர்வு ஒன்றில் பங்கேற்பதற்காகவே கொசோவா, சிம்பாப்வே, சிரியா மற்றும் ஜோர்ஜியா நாட்டுப் பிரதிநிதிகளுடன் சுவிட்சர்லாந்தில் தங்கியுள்ளேன்.
பயங்கரவாத குற்றப்புலனாய்வு பிரிவின் செயற்பாடு தொடர்பாக இங்கும் சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளேன். இதனால் நாட்டின் நற்பெயருக்கே (நற்பெயர் இருந்தால்) பாதிப்பேற்படும் என்பதை நினைவிற் கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.