தமிழீழ விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் 318 பேர் மீதான தடை நீக்கம்
தமிழீழ விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் 318 பேருக்கு எதிரான மற்றும் 4 அமைப்புகளுக்கு எதிரான தடை நீக்கப்படுவதாக இலங்கை அரசு, ஐநா மனித உரிமைகள் அமைப்பில் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த 22 விடுதலைப் புலிச் செயற்பாட்டாளர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
போரினால் காணாமல் போனவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதற்காக அதன் ஆரம்ப ஒதுக்கீடான ரூ.759 மில்லியனுடன் கூடுதலாக ரூ.53 மில்லியன் ஒதுக்கப்பட்டது என்றார்.
புலம்பெயர் சமூகத்துடனும், எமது நாட்டின் நல்வாழ்வுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் சிவில் சமூக அமைப்புகளுடனும் ஈடுபடுவதற்கு இலங்கை திறந்த நிலையில் உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.