ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்வனவு – ரணில்
நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் தட்டுப்பாட்டினை தொடர்ந்து, ரஷ்யாவிடம் இருந்து அதிகமானளவு எண்ணெய்யை கொள்வனவு செய்ய இலங்கை நிர்ப்பந்திக்கப்படலாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாக, வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதேவேளை, ரஷ்யா இலங்கைக்கு கோதுமையும் வழங்க முன்வந்துள்ளதாக, பிரதமர் தெரிவித்துள்ளாரென அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கைக்கு தற்போது எரிபொருள் தேவைப்படுகின்றது.
வெளிநாடுகளில் உள்ள தனியார் வழங்குநர்களிடம் நாம் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
எரிபொருள் கிடைக்காமையினால் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள தயாராகவுள்ளதோடு வேறெங்கும் எரிபொருள் கிடைக்குமாயின் அவர்களுடனும் கலந்துரையாட தயார் என அவர் தெரிவித்துள்ளார்.