ஆடையின்றி அலையும் பொதுஜனபெரமுன எம்பிக்கள்!
மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறையின் போது பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது.இதனால் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று மற்றவர்களிடம் உடைகளை பெற்று பாராளுமன்றத்திற்கு வருகின்றனர்.
தீயினால் வீடுகளை இழந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வியத்புர திட்டத்தில் தற்காலிகமாக வீடுகள் வழங்கப்படும் என அரசாங்கத்தின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்
போதைக்கு அடிமையானவர்கள் எங்கள் வீடுகளை அழிக்கும்போது, அதன் பின்னால் இருந்த அரசியல் கட்சிகளும் உள்ளன. சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று மற்றவர்களிடம் உடைகளை பெற்று பாராளுமன்றத்திற்கு வருகின்றனர்.
எனவே அவர்களுக்கு அந்த வீடுகளை தற்காலிகமாக வழங்க நாம் நடவடிக்கை எடுப்போம். அரச சொத்துக்களுக்கு தீ வைத்தவர்கள் இன்று பிணையில் விடுவிக்கப்படுகின்றனர். எமது பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த இன்றும் விளக்கமறியலில் உள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.