கோம்பபையன் மணல் மயானமும் புதுமை!
மயானங்களைப் புனரமைத்து அழகுபடுத்தி மயானம் என்றால் இவ்வாறு தான் இருக்கும் என்ற பாரம்பரிய சிந்தனைகளை உடைத்தெறிந்து, மாநகர முதல்வரின் தூய நகரம் அழகிய மாநகரம் என்ற செயற்பாட்டின் கீழ் புதுப்பொலிவுடனும் மீடுக்குடனனும் அமையப் பெற்ற கோம்பபையன் மணல் இந்து மயானத்தின் நுழைவாயில் மற்றும் அதனூடு இணைந்த கட்டடங்கள் திறப்பு விழா நடை பெற்றது.
மாநகர ஆணையாளர் இ.த செஜசீலன் தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வில் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் மயானத்தின் புதிய நுழையாலினை திறந்து வைத்தார்.
கோபம்பையன் மணல் இந்து மயானத்திற்கான இச் செயற்றிட்டத்தில் அதன் புதிய நுழைவாயிலினை சிற்றி ஹாட்வெயர் நிறுவன உரிமையாளர் சோ.பிரகதீசஸ்வரன் அவர்களும், ஓட்டுமடத்தினைச் சேர்ந்த அமரர் ஆ.க.கனகசபை ஞாபகாத்தமாக புதிய நுழைவாயிலுக்கான கதவினை அவரது புதல்வர் செல்வரட்ணம் அவர்களும், வைரவர் ஆலயத்தினை சிறி நதியா நகை மாளிகையின் உரிமையாளரான திரு. நடராஜா சத்தியரூபன் அவர்களும் காவலாளிக்கான அறையினை வண்ணi பிரம்பங்குளத்தினைச் சேர்ந்த அமரர் சிறிகாந்தராஜா ஜெயரூபன் அவர்களின் நினைவாக அவர்களது குடும்பத்தினரும் அமைத்து தந்திருந்தனர். இதனை விட கோம்மையன் மணல் இந்து மாயனத்தின் உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்துவதற்கு யாழ்.மாநகர சபை 20 லட்சம் ரூபாவினை ஒதுக்கியிருந்தது.
கோம்பபையன் மணல் இந்து மயான பரிபால சபையினரின் முழுமையான ஒத்துழைப்புடன் மேற்படி மயானம் புதுப்பொலிவு பெற்றுள்ளது,